தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், கூட்டணிகள் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவற்றின் கூட்டணி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் கூட்டணி, தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க இரு கட்சிகளின் ஒத்துழைப்பாகவும், தேர்தல் உத்திகளின் முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது.
அதிமுக-தேமுதிக கூட்டணி, தமிழக அரசியலில் ஒரு முக்கியமான அரசியல் ஒருங்கிணைப்பாக விளங்குகிறது. தேமுதிக கட்சிக்கு மாநிலங்களவை செய்து ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு இடங்களுமே முக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இது தேமுதிக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆத்திரத்தில் இபிஎஸ் மூளை கலங்கி போயிருக்காரு! முத்தரசன் கடும் தாக்கு..!

தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம் பெறாத என்று பேசப்பட்ட வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர விரும்புவதாக முன்னாள் அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர தயாராக இருக்கிறது என தெரிவித்தார். கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்ததாக தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக-தேமுதிக கூட்டணி தொடர்ந்து செயல்படுகிறது. 2025-இல் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், இந்தக் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பழிக்குப் பழி... ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர்! மேலும் 6 பேர் கைது..!