2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின. பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள், கூப்பன்கள், டோக்கன்கள் தொடர்பான புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லை... திமுக அரசை கிழித்து தொங்க விட்ட நடிகை கெளதமி...!
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடியில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐச் சுற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000 உதவித் தொகை அல்லது லஞ்சம் வழங்கப்படுவதாகக் கூறப்படும் காசோலைகள், இரட்டை இலை சின்னத்துடன் அச்சிடப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும்..! பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை..!!