தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதன்மையான இழுபறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிலவுகிறது. பாஜக தமிழகத்தில் தனது தேர்தல் இருப்பை வலுப்படுத்த விரும்புவதால், கடந்த தேர்தல்களை விட கணிசமாக அதிக தொகுதிகளை கோரி வருகிறது.
பாஜக 45 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும், ஆனால் அதிமுக அதை ஏற்க மறுப்பதாகவும் தெரிகிறது. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும், மொத்தமாக சில சிறிய கட்சிகளுடன் சேர்த்து 38 வரை செல்லலாம் எனவும் பேச்சுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதில் இறுதி ஒப்புதல் இன்னும் எட்டப்படவில்லை. பாமக, அமமுக போன்ற கூட்டணி கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கோரி வருகின்றன. பாமக ஏற்கனவே அதிமுகவுடன் தனி ஒப்பந்தம் செய்துகொண்டு 18 முதல் 23 தொகுதிகள் வரை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அமமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என பேச்சுகள் உள்ளன.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் டெல்லி சென்றனர்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!
இன்று தமிழகத்தில் அதிமுக பாஜக இந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை தர இருப்பதாகவும், அதிமுக- பாஜக இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி பேசி முடித்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீடு கையெழுத்து ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!