அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் இரு திராவிட கட்சிகள் தான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்காங்க. புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுடைய மறைவுக்கு பிறகு கூட பல இக்கட்டான சூழ்நிலையில் தேர்தல்களைச் சந்திக்கும் போதும் அதிமுகவுடைய வாக்கு வங்கி என்பது பெரும்பாலும் பாதித்தது கிடையாது எனக்கூறினார்.
வரவுள்ள 2026 தேர்தலில் இப்ப இருக்கக்கூடிய கட்சிகள், எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி அப்படின்ற தொடர்ந்து முன்னெடுத்துட்டு வருகிறார்கள், உண்மையிலேயே நிலவரம் அப்படித்தான் இருக்கிறதா?, அந்த மாதிரி ஒரு பிம்பத்தை இவங்க கட்டமைக்கிறாங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் ஆசை உண்டு. அது அவருடைய சொந்த விருப்பம். எதார்த்தமான உண்மை எந்தெந்த கட்சிக்கு தேர்தல் போட்டி என்பது நன்றாக தெரியும். தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த கூர்மையானவர்கள், சிந்திக்க கூடியவர்கள். தமிழகத்தில் இரண்டு கட்சிதான் பெரிய கட்சி. வர உள்ள 2026 தேர்தலில் இரண்டு கட்சிக்கு இடையிலே தான் போட்டி இருக்கும். அது எந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்கு முழுமையாக தெரியும்.
அதோடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரைக்கும் சுமார் 31 ஆண்டுகளும் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெயர் பெருகின்ற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்தோம். அதனால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்றிருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் மக்களை சந்திக்கின்ற பொழுது தெளிவாக இதை எடுத்துச் சொல்கின்றோம். அதே வேளையில் திராவிட முன்னேற்ற களம் நாலாண்டு கால ஆட்சியிலே இன்றைக்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இன்றைக்கு மக்களுக்கு எதிரான ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதையும் படிங்க: ஓங்கி குத்தணும்... விஜயை விமர்சித்த நடிகர் ரஞ்சித் மீது போலீசில் புகார்!
சட்ட ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் கொடுமைகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என பல தரப்பிலிருந்தும் போராட்டத்தை இந்த அரசு சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இன்னைக்கு திமுக மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது. ஆகவே நடைபெறுகின்ற 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவையில் அமைக்கப்பட்ட கூட்டணி சுமார் 210 இடங்களில் வெற்றி பெறும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... பற்றி எரியப்போகும் அரசியல் களம்...!