மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், இன்று மகிழ்ச்சியான நாள் திருப்பூர் மண்ணில் பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய துணை குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ளார். இது தமிழ்நாட்டு மண்ணுக்கு மக்களுக்கு கிடைத்த பெருமை.
நான் பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது. இந்த வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு எந்த திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை. கொலை கொள்ளை நடைபெறாத நாள் இல்லை. திமுக ஆட்சிக்கு வரும் போது சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது. எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை. மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கை சூனியமாகி விடுகிறது. திமுக அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. எதிர்கட்சி என்ற முறையில் அறிக்கை வெளியிட்டு அதனை கவனத்திற்கு கொண்டு வந்தோம், ஆனால் முதல்வர் கண்டு கொள்ளவில்லை.
இளைஞர்கள் வாழ்வு சீரழிந்து விட்டது. மக்களை நல்வழியில் கொண்டு செல்பவரே நல்ல முதலமைச்சர். நாட்டு மக்கள் எப்படி சென்றாலும் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும் என்பதே அவர் நோக்கம். கஞ்சா விற்பனையை தடுப்பேன் என டிஜிபி ஒருவர் அறிவித்து ஓய்வு பெற்று விட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் போதை நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். கொங்கு மண்டலத்தில் முதியவர்கள் கொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையடிக்கப்படுகிறது.அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
இதையும் படிங்க: கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருக்கே... இபிஎஸ்க்கு அடுத்தடுத்து சிக்கல்...!
தொழில் தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. 40 சதவீதம் உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. ஆனால் அதிமுக அரசு உணவு பொருட்களை மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய 100 கோடி ஒதுக்கி இருந்தோம். வீட்டு வரி குடிநீர்வரி, குப்பை வரி, மின்கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை திமுக ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தொடரும். குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்பட்ட நிலையில் திமுக அரசு அமைச்சரின் டி.பி.ராஜாவிற்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதன் மூலம் 300 கோடி இழப்பு ஏற்படும். 30 லட்சம் இணைப்புகள் இருந்த நிலையில் வருமானம் கிடைத்தது. ஆனால் இன்று 12 லட்சம் இணைப்புகள் தான் உள்ளது. மக்கள் அனுப்பிய 9 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணமல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் என 46 பிரச்சினை என கண்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதாக நாடகம் ஆடுகின்றனர். 4 வருடம் கழித்து இப்போது தான் மக்களிடம் வந்துள்ளார் முதல்வர். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. திமுகவின் பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. என பேசினார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி வாயிலை அடைத்து கட்-அவுட்... அதிமுகவினர் அட்ராசிட்டியால் பல்லடம் மக்கள் அவதி...!