சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி தீவிரவாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். வீடுகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், புலியந்தோப்பு, சூலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதி நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் கொண்டது. கடந்த பல தேர்தல்களில் திமுகவின் வலுவான கோட்டையாகவே இது கருதப்பட்டு வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இங்கு புதிய முகத்தை களமிறக்கியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபோது, எழும்பூர் தொகுதிக்கு அபிஷேக் ரங்கசாமி என்பவரை வேட்பாளராக நியமித்தது. அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அபிஷேக் ரங்கசாமியின் மனு ஏற்கப்பட்ட நிலையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மக்களை நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இதையும் படிங்க: திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!
வீடுகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வருகிறார். அது மட்டுமல்லாது திறந்த வெளி வாகனத்தில் நின்றவாறு பரப்புரை நடத்தி வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சரும் ராயபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஜனநாயகன் பிரச்சனைக்கு உதயநிதியும், எல். முருகனும் தான் காரணம்..! ஆதவ் பகிரங்க குற்றச்சாட்டு..!!