சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலாஜி சுகுமாரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். தொகுதி மறு வரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறு வரையறை மூலம் தமிழ்நாட்டு எம்பி.கள் 59 ஆக உயரும் என்று அமித் ஷா விளக்கமளித்திருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழ்நாட்டு எம்பிக்கள் எண்ணிக்கை குறையும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எம்பிக்கள் 59 ஆக உயரும் என அறிவித்த பிறகும் முதல்வர் கருப்பு சட்டை அணிந்ததன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் ஸ்டாலினின் கருப்பு சட்டைக்கு வேலையில்லாமல் போய் இருப்பதாகவும் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்தானே நடக்கிறது ஆனால் முதலமைச்சர், தமிழ்நாடு அணி vs டெல்லி அணி பேசுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: "தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றாத திமுக"..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள அவர் அதிமுகவின் கோட்டையாக சேலம் மாவட்டம் இருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டை திமுக ஆளலாம்., ஆனால் சேலத்தை ஆள்வது அதிமுக தான் என்றும் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டை கருணாநிதி குடும்பம்” சுரண்டிப் பிழைப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதிமுக மக்களுக்கு சேவையாற்றும் கட்சி என்றும் திமுக குடும்ப கட்சி எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!