2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முறமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன.
கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறுவதை உறுதி செய்வதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுப்பதற்கான கால வரம்பை அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025 டிசம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை விருப்பமான கல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயத்தை போக்க இபிஎஸ் போட்ட மேக்கப் தான் பொதுக்குழு கூட்டம்... R.S பாரதி விமர்சனம்...!
15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்., முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயிரை பார்க்காமல் ரயில் ஏறி போனவர் உதயநிதி… திமுக அரசால் வாடிய விவசாயிகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…!