விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தோல்வி குறித்த உண்மையைப் போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சிவகாசி வடக்கு ஒன்றிய அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுப் பேசியதாவது:-
விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதியில் வாக்காளர்களுக்கு வாகன வசதிகளை நாம் செய்து கொடுக்காமல் விட்டதால் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமால் போனதே தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் தோல்விக்கு காரணம் எனவும், 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தால் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்றும், இதன் மூலமாக வெற்றியை க் கோட்டைவிட்டுவிட்ட தாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலமான காதல் லீலைகள்...!
வெற்றியை எங்கு தவறவிட்டோமெனக் கண்காணிக்கும் போது எனது கண்ணுக்கு வெளிச்சமாக தெரிந்தது சிவகாசி வடக்கு ஒன்றியத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாதது தான் என்பது தெரியவந்தது.
50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்துவிட்டோம். அதுபோல் எப்போதும் இருக்க கூடாதென்பதற்கு நடந்து முடிந்த கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு ஒரு படிப்பினையாகும்.
நாம் மிகவும் கவனமாக இருந்திருந்தால் தம்பி விஜயபிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பார், அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்த பெருமையையும் நாம் பெற்றிருப்போம்.
எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் கவனமாக செயல்பட வேண்டு மெனபாக முகவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: கட்சியைக் காட்டிக் கொடுத்து கூத்தடிப்பவர்களை எப்படி ஏற்க முடியும்? - செங்கோட்டையனை சீண்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி...!