மதுரையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, அதில், நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் என செல்லூர் ராஜு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை மனுவினை அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு கூறுகையில் "எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள், சத்துணவு ஆயாக்கள், தூய்மை பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், மதுரையில் நிறைய பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் நிறைய இடங்களில் திரும்ப பெறவில்லை.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, அதில், நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது.
இதையும் படிங்க: எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!
எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது" என கூறினார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளில் தொடரும் குழப்பம்:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்கென படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், அந்தப் படிவங்களை நிரப்புவதில் பொதுமக்களுக்கு சில சிரமங்கள் உள்ளது. 2002 வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை கண்டுபிடிப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீவிர திருத்த பணியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் பெரும்பாலானோர் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் என்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
அதேசமயம், திமுக பூத் ஏஜெண்ட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகளில் வாக்காளர்களுக்கு உதவுவதாக கூறி குளறுபடிகளில் ஈடுபடுவதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். திமுகவைச் சார்ந்தோர் போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்கிறார்கள் என அதிமுக குற்றச்சாட்டி வருகிறது. சமீபத்தில் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அனைவருமே அமைச்சர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி தான் நடக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் குற்றச்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போடா… ஆளும் மை**ம்… SIR கேள்வியால் ஆத்திரம்… செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான்…!