திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சமூக சமத்துவ 25வது ஆண்டு மாநில மாநாடு இன்று இரவு தோமையார்புரம் புறவழிச்சாலையில் நடைபெற்றது. மாநாட்டில் கட்சித் தலைவர் தலைவர் ஜான்பாண்டியன், பொதுச்செயலாளர் பிரிஸில்லா பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டில் கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், “தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அமையுள்ள ஆட்சி கூட்டணி ஆட்சி தான். கூட்டணி ஆட்சி அமைகின்ற பொழுது நீங்கள் மாநாட்டில் வைத்துள்ள தீர்மானங்கள் அனைத்தையும் செயல் வடிவம் பெறுவதற்கு உற்ற துணையாக இருப்போம் என பகிரங்கமாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி ஆட்சி தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், “பாஜக, அதிமுகவிற்கு 39 சதவீதம் வாக்குகள் ஏற்கனவே பெற்று விட்டோம் இந்த கூட்டணியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று அமித்ஷா தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளது தமிழகத்தில் அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணியுடன் போட்டியிட்டு எடப்பாடி பழனிச்சாமி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைப்பார்” என்றார்.
இதையும் படிங்க: ஜனநாயக பட ஊழலை ஒழிச்சுட்டு பேசுங்க விஜய்! அதிமுக யார் கிட்ட இருக்குன்னு தெரியனுமா? சிங்கை ராமச்சந்திரன் பதிலடி
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் ஆட்சி அமைப்பது குறித்து இரண்டு வெவ்வேறு கருத்துக்களை கூறியது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு முத்தாய்ப்பாய் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஆனால் அவர் கூறியது தவறு என மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் நல்லாட்சியை உருவாக்க வேண்டும். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வர வேண்டும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரவேண்டும் என பேசினார்.
நெல்லைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையாது என்பதை சுசகமாக தெரிவித்தார். ஆனால் அமித்ஷா சொன்னதில் தவறு என்பதை சுட்டிக் காட்டும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தவெக மாநாடு மூலம் அமித் ஷாவை குஷிப்படுத்திய விஜய்... வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி...!