அதிமுகவின் முக்கிய பேச்சாளராகவும் திகழும் ச. கல்யாணசுந்தரம், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். 2010-ஆம் ஆண்டு, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டபோது, கல்யாணசுந்தரம் அதன் மேடைப் பேச்சாளராகவும், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். இக்கட்சியின் தீவிர தமிழ் தேசியவாதக் கொள்கைகள் அவரது சமூக நீதி உணர்வுக்கு ஏற்ப அமைந்தன.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் என்டிசி சார்பில் போட்டியிட்டு, தனது அரசியல் திறமையை நிரூபித்தார். இருப்பினும், கட்சியின் உள் முரண்பாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து விலகினார். அதே ஆண்டு டிசம்பரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வருவதன் மூலம், கட்சியின் செய்தி பரப்புப் பணியை நிர்வகித்து வருகிறார்.
இதையும் படிங்க: மாரிதாசை விடுதலை செய்... இதுக்கு பேரு பாசிசம் இல்லையா? கொந்தளித்த அதிமுக...!
இந்த நிலையில் அதிமுகவின் மாநில செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரத்தின் கார் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் அதிமுக நிர்வாகி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அதிமுக மாநில செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு! முக்கிய காரணம் தெரியுமா?