தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மனைவி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். தன்னை வீட்டிற்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி சங்கீதா மனுவில் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரி பாதி உரிமை இருப்பதாகவும் சங்கீதா முறையிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சங்கீதாவிற்கு விஜய் துரோகம் செய்துவிட்டதாகவும் இவர் அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்றும் இவர் மக்களுக்கான தலைவர் கிடையாது என்ற விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் இந்த விவாகரத்து விஷயம் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயம் பூதாகரமாக வெடித்து வரும் சூழ்நிலையில் சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கை க்ளோஸ்..!! ஒரே போடாக போட்ட செல்லூர் ராஜு..!!!
அப்போது விஜய் விவாகரத்து விஷயத்தில் திமுக தலையிடுவதாக கூறியுள்ளார். விஜய் விவாகரத்து விஷயத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இமேஜை திமுக கெடுக்க பார்க்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். திமுக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என்றும் தெரிவித்துள்ளார். அரசியலில் காலூன்றி உள்ள விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது கட்சியை பலப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு மேடையிலும் திமுகவை கடுமையாக விஜய் விமர்சித்து வரும் சூழ்நிலையில், விஜய் விவாகரத்து விஷயம் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகனுக்கு ரூ.100 கோடியில் பிரம்மாண்ட திருமணம்... திமுக அமைச்சருக்கு ஜெயில் உறுதி... அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜு...!