கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தில் விலைவாசி உயர்வு உச்சத்தில் இருக்கிறது. இதுதான் தமிழக முதலமைச்சர் விஜய் ஆற்றிய சாதனை. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, கள்ளச் சந்தைகள் அதிகரித்தல் போன்றவை விலைவாசி உயர்வுக்கு காரணம். ஆறு மாத காலத்தில் தவெக அரசு எல்லா வகையிலும் முடங்கிப் போய் இருப்பது என்பது தெரிகிறது.
காங்கிரஸ், திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரத்திற்கு தடை விதித்ததில்லை. ஆனால் இன்று ஆட்சி பொறுப்பில் இருக்கும் விஜய் ஹிட்லரை போன்று செயல்பட்டு வருகிறார். விலைவாசி உயர்வு பற்றி பேசிய பேராசிரியர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். இது சர்வாதிகார சிந்தனை கொண்டது தான்.
நிரந்தர முதலமைச்சர் என்ற எண்ணம் தோன்றினால் தான் ஆணவத்தோடு இந்த சர்வாதிகார சிந்தனை ஏற்படும். இது மிகவும் கண்டனத்துக்குரியது. 5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த தேர்த்கலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு கூட முடியாமல் போய்விடும்.
இதையும் படிங்க: கசாப்பு கடை ஆடுகளா மக்கள்.? செஞ்சி சிறுமி எங்கே.? "சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு"... சாடிய EPS..!!
தவெக-வை சார்ந்தவர்கள் தான்தோன்றித்தனமாக சட்டம் ஒழுங்கு கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் அவர்களுக்குள்ளே சண்டை இட்டுக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருக்கிறது. தன்னுடைய தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியாமல், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு முதலமைச்சராக விஜய் இருக்கிறார்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் என கரூருக்கு சென்று அங்கே உள்ள முன்னாள் அமைச்சரை இழிவு படுத்தன்பாட்டு பாடிய முதலமைச்சர் விஜய், தற்போது மது பாட்டிலுக்கு ₹ 10 ரூபாய் உயர்த்தி உள்ளது குறித்து பதில் அளிக்கவேண்டும்.
3,767 கோடி ரூபாய் முதலீடு 4,853 பேருக்கு வேலை வாய்ப்பு என முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதில் எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு என தெரிவிக்கவில்லை. ரீல்ஸ்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாகவே உள்ளது.
முறையாக திட்டமிடல் இல்லாததால் 41 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்படுகிறது. பிற மாநிலங்களில் 16 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது . தனியார் நிறுவனங்கள் சோலார் மற்றும் கற்றாலை மின் உற்பத்திக்கு அனுமதி கோரி வருகின்றனர்.
அவர்களுக்கு அரசு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மின்சாரம் வழங்கும் பிற மாநிலங்கள் அவர்கள் சொல்லும் கட்டணத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
செஞ்சி சிறுமி மற்றும் தேனி சிறை கைதிகள் தப்பியது போன்ற சம்பவங்கள் சட்ட ஒழுங்குகை கேள்வி எழுப்பி உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!