சென்னையின் வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வரு வெங்கடஜலபதி அரண்மனை மஹால், இன்று அதிகாலை முதல் அரசியல் ஆரவாரத்தால் நிரம்பியுள்ளது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்தக் கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் முதல் உயர்மட்ட முடிவெடுக்கும் அமர்வாக அமைந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், கூட்டணி உறவுகள், உள்நாட்டு சவால்கள் மற்றும் தேர்தல் உத்திகளைப் பற்றிய முக்கிய விவாதங்களைத் தாங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் தூவி கிராமிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை காண்பதற்காக ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அதிமுக பொதுகுழு நடைபெறும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசரின் சிக்கி கீழே விழுந்து அதிமுக தொண்டர்கள் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்... முழு விவரம்...!
அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அனுமதிச்சீட்டு இல்லாதவர்களும் உள்ளே செல்ல முயன்றதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசரி சிக்கி அதிமுக தொண்டர்கள் கீழே விழுந்தனர். அவர்களுள் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால் மூட்டு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கூட்டணி முடிவெடுக்க இபிஎஸ்- க்கே முழு அதிகாரம்... பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்...!