அமைச்சர் பதவி கனவால் அதிமுகவிலிருந்து கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புகைப்படம் கிழிப்பு துடைப்பதால் அடித்து தீ வைக்க முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து தவெக கட்சியில் இணைந்தார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகம் நகரம் சார்பில் அதிமுகவினர் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நமதுராந்தகம் எம் ஜி ஆர் சிலை அருகே நடைபெற்றது.
அதில் சட்டமன்ற உறுப்பினர் புகைப்படத்தை துடப்பத்தால் அடித்து கிழித்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள், அதனை தீவைத்து கொளுத்த முயற்சித்தனர், அதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஏமாற்றிய “மரகதம் குமரேல் பணத்துக்காகவும் பதவிக்காகவும் ஆசைப்பட்ட மக்கள் துரோகி” “தாய் வீடாக இருந்த மதுராந்தகம் வாக்காளர்களை மறந்து மாற்றுக் கட்சியில் இணைந்த மானங்கெட்ட நன்றிகெட்ட மரகதம் குமரவேல்” என கோஷங்கள் முழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்"..! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த, காஞ்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆறுமுகம்: கட்சி மாறி கட்சிக்கு அவபேர் உண்டாக்கிய மரகதம் குமரவேல் கூட்டணி கட்சியின் உழைப்பால் வெற்றி பெற்றார். கடந்த இருமுறை பாராளுமன்ற தேர்தலிலும், இரு முறை சட்டமன்ற தேர்தலில் இவர் தொகுதியில் போட்டியிட்டார். மதுராந்தகத்தில் கூட்டணியில் உழைத்த கூட்டணி கட்சியினர் தொகுதியில் உழைத்த மக்களை ஏமாற்றி மாற்று கட்சிக்கு சென்று உள்ளார். இவர் உடைய பாவம் இவர்களை சும்மா விடாது. அதனுடைய பலனை இவர் கண்டிப்பாக அனுபவிப்பார்.
நன்றி கூட கூற வராத மானங்கெட்ட மரகதம் குமரவேல் மந்திரி பதவி அவருக்கு கனவாக இருந்தது. அதனால் கட்சி மாறி உள்ளார். இவருடைய கனவு ஒரு நாளும் பலிக்காது தொகுதிக்கு வந்தால் அதனுடைய பலனை அவர் எதிர்கொள்வார். ஒரு பொழுதும் இவரை எந்த கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற விடமாட்டோம் அதற்குண்டான மாற்று வழியை நாங்கள் செய்வோம் என இவ்வாறு கூறினார்
இதையும் படிங்க: வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!