தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு மற்றும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கோரி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. 16.12.2025 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணியளவில், மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், M.L.A., தலைமையிலும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், Ex. M.P., முன்னிலையிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக கரைவேட்டிகள் கம்பி என்ன போவது உறுதி... இபிஎஸ் திட்டவட்டம்...!
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அய்யாச்சாமி..! திமுக ஊழலை பார்த்து கால்குலேட்டரை கன்பியூஸ் ஆயிடும்.. நயினார் கடும் விமர்சனம்..!