நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை தனது உறவினர்கள் வாயிலாக லஞ்சம் பெற்று திமுக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் 1,020 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதே துறையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலையை விற்று 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள செய்தி வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஒப்பந்தம் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ள செய்தி வந்துள்ளது ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,908 கோடி ரூபாய் ஊழல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 160 கோடி ரூபாய் ஊழல், தோட்டக்கலைத் துறையில் 141 கோடி ரூபாய் ஊழல், சென்னை மாநகராட்சியில் கழிவறை பராமரிப்பில் 364 கோடி ரூபாய் ஊழல் என்று தெரிவித்தார். நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு புரிந்த ஊழல்களை எல்லாம் மொத்தமாகக் கணக்கிட்டால் கால்குலேட்டருக்கே கண்ணீர் வந்துவிடும் என்று விமர்சித்து உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றத்தில் திக்.. திக்...!! - காலையிலேயே காவல்துறை அதிரடி... நயினார் நாகேந்திரன் உட்பட 113 பேர் மீது பாய்ந்தது நடவடிக்கை...!
இப்படி மக்களின் வரிப்பணத்தை நான்கரை ஆண்டுகளாக நாலாப்பக்கமும் சுரண்டித் தின்று, ஊழல் உடன்பிறப்புகளை ஒய்யாரமாக உலவவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா என முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: “யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஆனால்...?” - விஜயை விடாமல் சீண்டும் நயினார் நாகேந்திரன்...!