அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி தனம் செய்து வந்த நிலையில் திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்த ராஜேஷை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன. பைக்கில் வந்த மர்ம நபர்கள் ராஜேஷ் விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலின் நிகழ்ந்த இந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை டி பி சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் புல்கான் என்னும் ராஜேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில் கடந்த ஐந்து வருடமாக திருந்தி பந்தல் அமைக்கும் பணியை செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. சிறுமியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நிகழ்வுக்கு நயினார் கண்டனம்..!

அதிமுகவில் வகித்து வந்தவர் ராஜேஷ். இந்த நிலையில் நேற்று ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் அவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
ராஜேஷ் கொலை செய்தவர்கள் யார், எதன் காரணமாக கொலை நிகழ்ந்தது உள்ளிட்டவை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பட்டப் பகலில் ராஜேஷ் மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ராஜேஷ் சுற்றி வளைத்து மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் வைத்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. CRPF வீரர்கள் 3 பேர் பலி.. 15 பேர் காயம்..