திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் திடீரென சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இவ்வளவு தைரியம் எப்படி வந்தது., சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்தன. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சிசிடிவி காட்சிகள் இருந்தும் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்றும் காவல்துறைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.
சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை நோட்டம் விட்டுக் கொண்டே பின்னால் சென்ற அந்தக் கயவன், கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் வாயைப் பொத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகவும், ஒரு பத்து பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ஆதாரமுமின்றி ஒரு அப்பாவியை அடித்துக் கொன்ற தமிழகக் காவல்துறை, பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

சிறுமியின் சார்பாக திமுக பிரமுகர் யாராவது தலையிட்டால் மட்டும் தான் தகுந்த விசாரணை நடக்குமா என்று கேட்ட அவர், கடந்த நான்காண்டுகளாக காவல்துறையினர் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கால் குற்றவாளிகளுக்கும் குளிர்விட்டுப் போய் விடாதா என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வடபழனியில் பகீர் சம்பவம்.. தீய சக்திகளை விரட்டுவதாக கூறி பாலியல் வன்கொடுமை.. கோவில் பூசாரி கைது..!
இந்த நிலையில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த இருவரை குறி வைத்து எஸ் பி சீனிவாச பெருமாள் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. மொத்தம் ஐந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: துளிக்கூட பாதுகாப்பு இல்ல! ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்.. குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..!