1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, எளிய மக்கள், பெண்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை முன்னிலைப்படுத்தி வளர்ந்தது. 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, எம்.ஜி.ஆர்.யின் மறைவு அதிமுகவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் வெற்றி நடை போட்டு அதிமுக இயங்கியது.
அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவரது தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 54-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் கட்சியின் ஆண்டு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ADMK வாங்குன கடனுக்கு நாங்க வட்டி கட்டுகிறோம்… அத பத்தி பேச உரிமையே இல்ல… அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்…!
அதிமுக அலுவலகத்தில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அலுவலகத்தில் திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இனிப்புகளை வழங்கினார்.
இதையும் படிங்க: “கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜூடன் சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்... இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு...!