மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூடியது. கிட்னி விவகாரம் மற்றும் ஆளுநருக்கு எதிரான தீர்மானம், நெல் கொள்முதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில்கடன் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு என்றும் அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு ஐந்து ஆண்டுகளாக வட்டி கட்டி வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அதிமுக விட்டுச் சென்ற கடன் ரூ.1.40 லட்சம் கோடிக்கு நான்கு ஆண்டுகளாக வடிகட்டி வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 128 சதவீதம் அளவுக்கு கடன் அதிகரித்ததாகவும், ஆனால் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 93 சதவீதம் தான் கடன் வளர்ச்சி உள்ளதாகவும் கூறினார்.

கடன் பற்றி பேச அதிமுக உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காட்டமாக பதில் அளித்துள்ளார். சேராத இடம் போய் அதிமுக சேர்ந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கிடப்பில் மசோதா... வஞ்சிக்கும் கவர்னர்... பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் தீர்மானம்...!
மேலும் அதிமுக அரசு விட்டுச் சென்ற கடனைப் பற்றி பேசாதது ஏன் என்றும் மத்திய அரசு முறையாக நிதி வழங்கினால் மூன்று லட்சம் கோடி கடன் குறையும் எனவும் அவர் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள அதிமுக மத்திய அரசிடம் நிதி பெற்ற தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜி.கே.மணியை விரட்டாமல் விடமாட்டாங்க போலயே... கருப்புச்சட்டையில் கலவரத்தை ஆரம்பித்த பாமக எம்.எல்.ஏ.க்கள்...!