அதிமுகவும் பாஜகவும் 2026 சட்டமன்றத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள உள்ளன. முறிந்து போய் இருந்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்ததால் அதிருப்தியில் இருந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைந்து வருகின்றன.
குறிப்பாக அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தார். நேற்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணையும் அனைவருமே கூறும் முக்கியமான பிரச்சனை பாஜகவுடன் ஏற்பட்ட கூட்டணி தான். மேலும் எடப்பாடி பழனிச்சாமியையும் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தரங்கெட்ட அரசியல்! இதையே உங்களுக்கு பண்ணா மூஞ்ச எங்க வெச்சுப்பீங்க ஸ்டாலின்? அண்ணாமலை சாடல்..!
நேற்று அதிமுகவிலிருந்து விலகிய மைத்ரேயன், எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல நினைத்துக் கொள்கிறார் என்றும் பாஜகவுடன் ஏற்பட்ட கூட்டணி தொடர்பாகவும் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் அக்கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இது அதிமுகவின் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரும் என் அதிமுகவில் இருந்து விலகுகிறார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.
ஒருவேளை தங்கமணி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விடுவாரோ என்றும் பேசப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி பதிலளித்துள்ளார்.
இறுதிவரை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வரவேண்டும் என்று உயிர்மூச்சாக பணியாற்றி வருகிறேன் என்றும் தனது இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகவில் தான் எனவும் தங்கமணி தெரிவித்தார். இதன் மூலம் தங்கமணி அதிமுகவில் இருந்து விலகுகிறாரா என்பது தொடர்பான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: கட்சி தாவுறவங்க எங்கயும் நிலைக்க மாட்டாங்க! மைத்ரேயனை பூந்து விளாசிய இபிஎஸ்..!