தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 அளவில் கூடியது. அதற்கு முன்னதாக பாமக அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவை சந்தித்தனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணியை நீக்க கோரி அன்புமணி தரப்பினர் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தங்களது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் என்பவரை தாங்கள் நியமித்துள்ளதாகவும் ஜி.கே மணியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோர் சபாநாயகர் அப்பாவை அவரது அறையில் சந்தித்தனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்க கூடாது என்று சபாநாயகரிடம் முறையிட்டனர். பாமகவின் கொறடா தாம் தான் என சேலம் அருள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேசனை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார். சபாநாயகர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: அன்புமணி தான் பாமக தலைவர்… அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்! ராமதாஸ் தலையில் விழுந்த பேரிடி
அருள் பாமக சட்டமன்ற உறுப்பினர் அல்ல என்று கூறினார். அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக விளக்கமளித்தார். அன்புமணியை தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிக்பாஸ்... உடனே நிறுத்துங்க... கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கிய வேல்முருகன்...!