மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றில், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார்.
சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இதற்கிடையில், அஜித் குமாரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரின் முகாந்திரம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இன்று வழக்கின் விசாரணைக்காக நிகிதா ஆஜராகி இருந்தார்.
இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!
நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் எனவும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிய நிகிதா நகை திருட்டு புகாரை முடித்து வைக்க சம்மதம் தெரிவித்தார். ஏற்கனவே அஜித் குமார் கொலை வழக்கில் ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் நான்கு காவலர்களை வழக்கில் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லாக்கப் டெத்... சூடுபிடிக்கும் மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்..!!