மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்து அஜித்குமார் மீது நிகிதா என்ற பெண் நகையை திருட்டு புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணைக் அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர், விசாரணையின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இது காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும், சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகளை கடும் அதிருப்தியை தெரிவித்தது. அது மட்டுமல்லாது கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள்., மிருகத்தனமான தாக்குதல் என்றும் இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

நேர்மையான முறையில் சிபிசிஐடி அதிகாரிகள் சிறப்புக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. காலம் தாழ்த்தாமல் ஒரு வார காலத்திற்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறியது. காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளன. அஜித்குமார் கொலை வழக்கை கையில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் மடப்புரம் சென்றடைந்தனர். மடப்புரம் கோவிலில் அஜித்குமார் தாக்கப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை சரி செய்யுங்க.. இல்ல செய்ய வெப்போம்..! விஜய் ஃபயர் ஸ்பீச்..!
இதையும் படிங்க: ஒரு அமைச்சரா இப்படி தான் பேசுவாங்களா? வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்.. உயர்நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை..!