மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அஜித் குமாரின் மரண வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மிருகத்தனமாக தாக்கிய காவல்துறையினருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. அஜித் குமாரின் மரணம் தொடர்பான பிரச்சனையை மறைப்பதற்காக பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதனை நீதிமன்றமும் கூறியது. மேலும் அஜித்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், மண்பத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது தொடர்பாகவும் அதனை படம் பிடித்த ஊர் பொதுமக்களை காவல்துறையினர் தடுக்க முயன்றது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

கட்டப்பஞ்சாயத்து வீடியோவை சுட்டிக்காட்டி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அஜித்குமார் உடலை வாங்க மறுத்து வந்த சமயத்தில், காவல்துறை அவரது உறவினர்களை மண்டபத்தில் வைத்து பணம் தருகிறோம்.. போராட வேண்டாம் என கட்டப்பஞ்சாயத்து செய்ததை அதனை ஊர்மக்கள் படம்பிடித்த போது காவல்துறையினர் தடுக்க முயன்றதால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி உள்ளது.
எதற்கு அவர்களை மண்டபத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும்., யாரைக் காப்பாற்ற இந்த முயற்சியை எடுத்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ள அதிமுக, காவல்துறை மீது எந்தவித கட்டுப்பாடும் பொம்மை முதல்வருக்கு இல்லை என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா என்று சாடியது. அதிமுக கூட்டணியின் தொடர் எதிர்ப்பால் மட்டுமே இந்த வழக்கு CBI-க்கு மாற்றி இருப்பதாகவும், இல்லையேல், வழக்கை நீர்த்துப் போகவே இந்த அரசு முயற்சித்து இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது எனவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: அஜித் குமார் மரண வழக்கு! மடப்புரத்தில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள்... தீவிர விசாரணை..!
இதையும் படிங்க: முதன் முறையாக போராட்டக் களத்தில் விஜய்... கருப்பு நிற உடையில் பங்கேற்பு..!