சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். பத்து சவரன் நகை அவர் திருடியதாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றில், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார். சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி இருந்த நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து நிகிதா தனது தாயாருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. நிகிதா தனது முகத்தை மறைக்காமல் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில், மீண்டும் நடந்தவற்றை கூறியிருந்தார். அந்த வீடியோவிலும் பல சந்தேகங்கள் இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு நிகிதா மீது பண மோசடி வழக்கு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் நிகிதா பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் நிகிதா தொடர்பாக அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு நல்ல விதமான கருத்து கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இளைஞர் அஜித் காவல் மரணம்...ரூட்டை மாற்றிய நீதிபதி! திடீர் திருப்பம்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வரும் நிகிதா மீது கல்லூரி மாணவிகளும் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது. அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும், தான் செய்யும் தவறுகளை தட்டி கேட்பவர்களிடம் உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று நிகிதா திமிராக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிகிதா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கோவி.செழியன் பரிந்துரைகள் அனுப்பப்பட்டு நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் சூழலில், அஜித் குமார் மீது திருட்டு பட்டம் சுமத்திய நிகிதா புகார் கொடுத்ததும், திருமங்கலம் காவல் நிலைய போலீசார் இருக்கும்போது, தனிப்படை போலீசாரை வரவழைப்பதற்கு கட்டளையிட்ட உயர் அதிகாரி யார் என்ற கேள்வி தற்போது எழுந்தது.
இதையும் படிங்க: எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...