திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகிய மூவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டது
இந்த வழக்கு விசாரணையில் நால்வரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகினர்
மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகாத நிலையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இன்று தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி முன்பாக திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 3 பேரும் ஆஜராகிய நிலையில் இன்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: உலகமே பேரதிர்ச்சி...!!- இந்தியப் பெருங்கடலில் பேரழிவு... மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் நெருங்கும் ஆபத்து...!