மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் துறை டிஎஸ்பி சுந்தரேசன், உண்மையை சொல்வதால் என்னை பணியிட நீக்கம் செய்தாலும் கவலை இல்லை, வளைந்து கொடுக்காத அதிகாரிகள் நேர்மையாக இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறார்கள், உளவு பிரிவு அதிகாரி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், கணிப்படை காவல் ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், எனக்கு வாகனம் அளிக்காத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சுற்றும் நிலைமை உள்ளது.
நான் மாறுதல் பெற்று வந்த பொழுது எனக்கு நான்கு மாத சம்பளம் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் ஏழு வருட பணி உள்ள நிலையில், விருப்ப ஓய்வுக்கும் மனு அளித்து உள்ளேன். இன்னும் ஏழு ஆண்டுகள் சர்வீஸ் உள்ள நிலையில், என்னை டார்ச்சர் செய்கின்றனர். நான் சஸ்பெண்ட் ஆக வேண்டும் என்று வேலை பார்க்கின்றனர். போலீஸ் வேலையில் இது ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகும் தவறு என்று தெரியும் தெரிந்தே தான் பேட்டி அளிக்கிறேன். இதே போன்ற நிலைமை வேறு எந்த அதிகாரிக்கும் வரக்கூடாது.
இதையும் படிங்க: பேயாட்டம் ஆடிய கட்டிடங்கள்... விண்ணை நோக்கி சீறிய கடல் அலைகள்... அமெரிக்காவிற்கு சுனாமி எச்சரிக்கை...!
சிறப்பு தனிப்படை பிரிவை வைத்து உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் பணம் வாங்கப்படுகிறது. அதிகாரிகள் செய்யும் தவறுக்கு காவல் துறையினர் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் இருந்து செந்தில்குமார் ஐபிஎஸ், டேவிட் ஆசீர்வாதம் ஆகியோரின் அழுத்தத்தின் காரணமாகவே மயிலாடுதுறையில் நிர்பந்திக்கப்படுவதாக டி எஸ் பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!