2015 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவரம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவம். இது இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் தூண்டப்பட்டு, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கலவரம். 2015 ஆம் ஆண்டு ஜமீல் அகமது என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் அடித்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ரிஷிதா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், பவித்ராவை காணவில்லை என அவரது கணவர் பழனி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல்அஹ்மது என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர் போலீஸார் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உறவினர்களின் இந்த குற்றச்சாட்டை அடுத்து ஆம்பூரில் கலவரம் வெடித்தது. ஆம்பூரில் உள்ள ஒரு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இந்த மோதல் விரைவில் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது. கலவரக்காரர்கள் கற்களை வீசுதல், வாகனங்களை எரித்தல், கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு... வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!
கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேர் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியானது. 7 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், 161 பேர் விடுதலை செய்யப்படுவதாக திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் வழக்கில் 26 பேரும், இரண்டாவது வழக்கில் 28 பேரும், மூன்றாவது வழக்கில் 39 நபர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நான்காவது வழக்கில் 25 பேரும் ஐந்தாவது வழக்கில் 12 பேரும் ஆறாவது வழக்கில் 24 பேரும் என விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு... வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!