சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள்' என்று பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், நேற்று தலைநகரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டும் அல்ல. அது தேசத்தின் உயிர் நாடி. மொழிகளை போற்றி பாதுகாப்பதின் மூலம், நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை முன்னெடுக்கலாம். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த ஒரு வெளிநாட்டு மொழியையும் வெறுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால், நம் சொந்த மொழி மீதான விருப்பம் கவுரவத்தையும் மறக்கக் கூடாது. அனைத்து மாநில அரசுகளும் தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொறியியல், மருத்துவ படிப்புகளை மாநில மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: எந்த மொழிக்கும் இந்தி எதிரி இல்லை.! நண்பன் தான்.!! தாய்மொழி குறித்து அமித்ஷா வைத்த ட்விஸ்ட்..!
நம் நாட்டில் 11 செம்மொழிகள் இருப்பதுபோல், வேறெந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. இந்தி மொழி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரி அல்ல. அது அனைத்து இந்திய மொழிகளின் தோழி. நண்பன். அனைத்து இந்திய மொழிகளையும் நேசிப்போம்; பாதுகாப்போம். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த வெளிநாட்டு மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நம் சொந்த மொழியை பெருமைப்படுத்த வேண்டும். சொந்த மொழியில் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும் தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தாய் மொழியில் பேசுவதின் மூலம், சிந்திப்பதின் மூலம், நம் அடிமை எண்ணம் விலகும். சுதந்திரமான பல கருத்துக்கள் தோன்றும் என அமித் ஷா பேசினார்.
இந்த நிலையில் இதை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள கனிமொழி எம்.பி. "அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்" என கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம் என கனிமொழி எம்.பி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆங்கிலம் அவமானம் அல்ல.. அமித் ஷா பேச்சுக்கு ராகுல்காந்தி THUG கமெண்ட்..!