தமிழ்நாட்டின் அரசியல் மரபு பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகியவை தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழ் அடையாளத்தையும், சமூக நீதி கொள்கைகளையும் மையப்படுத்தி செயல்படுவதால், பாஜகவின் இந்துத்துவ அரசியல் மக்களிடையே எளிதில் ஏற்கப்படுவதில்லை. மேலும், பாஜகவின் இந்துத்துவக் கொள்கைகள், தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் பகுத்தறிவு பாரம்பரியத்துடன் முரண்படுவதாக பலரால் உணரப்படுகிறது. இதனால், பாஜகவின் கருத்தியலை மக்களுக்கு ஏற்புடையதாக மாற்றுவது கடினமாக உள்ளது.
கூட்டணி அரசியலும் பாஜகவின் முக்கிய உத்தியாக உள்ளது. கடந்த காலங்களில், பாஜக தமிழகத்தில் அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டது. ஆனால், இந்த கூட்டணிகள் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்தன. 2019 மக்களவைத் தேர்தலில், பாஜக ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை. இதனால், கூட்டணி உத்தியை மறுபரிசீலனை செய்து, தனித்து போட்டியிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. 2024 தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட்டு, தனது வாக்கு விழுக்காட்டை உயர்த்த முயற்சித்தது, இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

மற்றொரு முக்கிய அம்சமாக, பாஜக தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிப்பதாகக் காட்ட முயல்கிறது. பிரதமர் மோடி தமிழில் பேசுவது, தமிழ் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பது, திருக்குறள் மற்றும் தமிழ் பண்பாட்டைப் புகழ்வது போன்ற செயல்பாடுகள், தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைவதற்கு மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: 9 பெண் உட்பட 30 நக்சலைட்டுகள் சரண்!! அமைதி நோக்கி நகரும் சத்தீஸ்கர்!!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை பாஜக தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள அமித் உஷா இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானத்தை ஸ்ரீனிவாசன், எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்.. போட்டுடைத்த அமித்ஷா..!!