அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கப் போவதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தாங்கள் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே (NDA) நீடிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

சில ஊடகங்களில் அமமுக, தவெக-விற்கு ஆதரவு தருவதாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி அக்கட்சி வெளியிட்டுள்ள விளக்கங்கள் அமமுக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதில் எள்ளளவும் உண்மையில்லை. எங்கள் கட்சியின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில்தான் தங்கியிருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக உள்ளது.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்கும் ஊடகங்கள், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும், இது போன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமமுக அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் ஆளுநரைச் சந்திக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அமமுக-வின் ஆதரவும் அவருக்குக் கிடைத்துவிட்டதாகப் பரவிய தகவல், தற்போது அக்கட்சியின் அதிகாரப்பூர்வ மறுப்பால் முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் அமமுக உறுப்பினர் தங்கியிருப்பது, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!