தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகும்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி. இதை நிறைவேற்ற வில்லை எனக் கூறி ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாப்படி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். பொங்கல் தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பகுதிநேர் ஆசிரியர்களின் ஊதிய மேலும் 2500 ரூபாய் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 இல் இருந்து 15000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க… தமிழக அரசின் புதிய திட்டம்..! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். வருங்காலத்தில் மகிழ்ச்சி உறுதிப்படுத்தும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறினார். மத்திய அரசு நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலேயே செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்யும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அவங்க என் குடும்பம்... இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் - அன்பில் மகேஷ் உறுதி...!