உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம் என்றும் உங்களின் கனவு என்ன என்று கேள்விகளை கேட்டும் பதில் பெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி பொதுமக்களின் கனவுகளை கேட்டு அறிய உள்ளதாகவும் கூறினார். இளைய சமுதாயம் மற்றும் அயலக தமிழர்களிடமும் கனவுகள் குறித்து கேட்டு அறிய முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அவங்க என் குடும்பம்... இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் - அன்பில் மகேஷ் உறுதி...!
உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்திற்காக ஐம்பதாயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அரசு என்ன செய்தது., என்ன செய்ய வேண்டும்., 2030க்குள் உங்கள் ஊர் சார்ந்த தேவை என்ன நிறைவேற்ற வேண்டும் என்ற கேள்விகள் இருக்கும் என்று கூறினார். வரும் ஒன்பதாம் தேதி உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் பொன்னேரியில் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவரின் கருத்துக்களை கேட்டு அறிந்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதி திரட்டப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இதை அன்றைக்கே செய்திருக்கலாமே..! யார் மத கலவரத்தை தூண்டுவது..? நயினார் விளாசல்..!