பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து இரண்டு துண்டுகளாக மாறியது. முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் ஆரம்பித்த பிரச்சனை இன்றுவரை ஓயவில்லை.
இன்று சரியாகும் நாளை சரியாகும் என காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற வார்த்தையை ராமதாஸ் கூறியதில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த தொண்டர்கள், தற்போது அன்புமணியை ஆதரிப்பதா ராமதாசை ஆதரிப்பதா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
காரணம் அன்புமணி தரப்பு ஒரு பிரிவாகவும் ராமதாஸ் தரப் ஒரு பிரிவாகவும் பிரிந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள், நடைபயணங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சி பதவியில் இருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை நீண்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒட்டு கேட்பு விவகாரம்.. ராமதாஸ் வீட்டு WIFI மோடம் போலீஸில் ஒப்படைப்பு.. தீவிர விசாரணை..!

இதற்கிடையில் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டதாக எழுந்த புகார் மேலும் சர்ச்சையை கிளப்பியது. அன்புமணி தான் இதற்கு காரணம் என ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமில்லாமல் ராமதாஸின் செல்போன் மற்றும் வைபை மோடம் ஆகியவையும் ஹேக் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அன்புமணி தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை கூறி உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழுவிற்கு தடை கூறவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: #BREAKING மீண்டும் அதிர்ச்சியில் ராமதாஸ்... பதறியடித்துக்கொண்டு போலீசிடம் ஓடிய உதவியாளர்... பிண்ணணியில் அன்புமணி ஆதரவாளரா?