திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர் அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு, கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாணவர் யுவராஜ் மரணம் பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் தனது இரங்கலையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதாகவும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் விளக்கம் அப்பட்டமான பொய் என்றும் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அறிவு இருக்கா?” - அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!

அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், யுவராஜ் மட்டும் எப்படி உள்புறமாக தாழிட்டு தற்கொலை செய்து இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுவதாகவும், பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறிய அன்புமணி, மாணவர் யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: `ஊதி ஊதி பெருசாக்காதிங்க..' - கையெடுத்து கும்பிட்ட ராமதாஸ்...!