அன்புமணி ராமதாஸின் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக திமுக அரசு தயங்குவதாக அவர் கேள்வி எழுப்பி வருகிறார். சமூக நீதியைத் தனது கொள்கையின் அடிப்படையாகக் கொண்டிருக்கும் திமுக, ஏன் சாதிவாரியான கணக்கெடுப்பைத் தவிர்க்கிறது என்று அவர் கேட்டார். இது, பீகார் போன்று சாதி அடிப்படையில் தரவுகளைச் சேகரிப்பதன் மூலம் உண்மையான சமூக நீதியை நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அன்புமணியின் நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
உச்ச நீதிமன்றமும் உள்ளாட்சிகளில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்திருந்தாலும், தமிழக அரசு அதை நடத்தத் தயங்குவதை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனம், திமுகவின் சமூக நீதி உறுதிமொழிகளை வெறும் வாய்மொழி என்கிற அன்புமணியின் கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாருக்கு அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். திமுக சமூக நீதியின் துரோகி மட்டுமல்ல விரோதி என்றும் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என விமர்சித்தார்.
இதையும் படிங்க: அன்புமணி, வடிவேல் ராவணன், திலகபாமா - மூன்று பேரையும் சிங்கிள் ஆளாக மிரளவைத்த பாமக எம்.எல்.ஏ...!
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து சாதி மக்களுக்கும் முறையான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் சமூகநீதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே பாமக தான்... அன்புமணியே தலைவர்! திலகபாமா பரபரப்பு பேட்டி