மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி பகுதியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியம், நகரம், பேரூர், மாநகராட்சி, பகுதி செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அன்புமணி ராமதாஸ் உரை நிகழ்த்தினார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என உறுதிப்பட தெரிவித்தார்.
மிகப்பெரிய அளவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும் அந்த மெகா கூட்டணியின் முன்பு திமுக படுதோல்வியை சந்திக்க போவது உறுதி எனவும் கூறினார். பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் திமுக தான் காரணம் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். ஐயா ராமதாசை சுற்றி தீய சக்திகளும் திமுகவின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள் என்றும் கடுமையாக பேசினார். பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக குளிர் காய நினைக்கிறது என்றும் தெரிவித்தார்.

பாமகவை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் திமுகவுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார். எவ்வளவு அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தார். துரோகிகளை ஒருபோதும் தான் மன்னிக்கப் போவது கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தைலாபுரம் தோட்டத்தை திமுகவினர் கட்டுப்பாட்டை எடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஐயா ராமதாஸ் ஒரு குழந்தை போல் ஆகிவிட்டார் என்றும் அவருக்கு 87 வயதாகி விட்டது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசி அன்புமணி, இன்னும் மூன்று மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக் கொண்டிருங்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அன்புமணி தான் தலைவர்..!! ராமதாஸுக்கு பறந்த கடிதம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!
டெல்லியில் 30 பேர் போராட்டம் நடத்தி விட்டு 3000 பேர் கலந்து கொண்டதாக ராமதாஸிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள் என்றும் தான் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக அய்யா ராமதாஸிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள் என்றும் கூறினார். ஜிகே மணி போன்றவர்கள் மனிதர்களாக இருப்பதை தகுதியற்றவர்கள் என்று சாடினார்.
இதையும் படிங்க: உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!