தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை ஒவ்வொருவராக சந்தித்து வருகிறார் முதல்வர் விஜய்.

அரசியல் நாகரிகம் என்று அனைவரும் இதனை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் விஜயின் செயல்பாட்டை அனைவரும் வரவேற்றுள்ளனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரை சந்தித்து முதலமைச்சர் விஜய் பனையூரில் உள்ள இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணியை சந்தித்தார்.
இதையும் படிங்க: புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!
மரியாதை நிமித்தமான முதல்வர் விஜயின் இந்த சந்திப்புகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. தங்கள் இல்லத்திற்கு வந்த முதல்வரை பாமக தலைவர் அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் வாசல் வரை வந்து வரவேற்றனர். தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த அன்புமணி குரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!