முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் கொந்தளித்துள்ளனர். மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்தனர். திமுக தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சூழலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மருத்துவ குழுவினர் எஸ் பி அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!