செந்தில்பாலாஜி விவகாரத்தில் பணத்துக்காக வேலை வழங்கிய ஊழல் வழக்கு குறித்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என ED தமிழ்நாடு அரசுக்கு நேரடியாகக் கடிதம் எழுதி இருந்தது. அதற்குள் அடுத்த திமுக முன்னாள் அமைச்சரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் அமலாக்கத்துறை தொடர்ந்து முக்கிய புள்ளிகளை நெருக்கி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. செந்தில்பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கோரி ED அனுப்பிய கடிதத்தைப் போலவே, அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான விசாரணைக்கும் அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. பணமோசடி வழக்கு ஒன்றில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே செந்தில்பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் என கூறி கடிதம் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: CM விஜய் காட்டும் நிர்வாக வேகம்! சென்னையில் அதிரடி..! 5 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!
செந்தில்பாலாஜி விவகாரத்தில் பணத்துக்காக வேலை வழங்கிய ஊழல் வழக்கு குறித்து ED தமிழ்நாடு அரசுக்கு நேரடியாகக் கடிதம் எழுதி விசாரணையை தொடர அனுமதி கோரியது. அதற்குள் அடுத்த திமுக முக்கிய புள்ளிக்கு செக் வைப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??