சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறி இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது., அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்ற போது, அதில் 10 பேர் கூட இல்லையே எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!
மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் சேகர்பாபு என்றும் இப்படித்தான் ஒரு முறை, முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார். அமைச்சர் தகே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்ததாகவும் சுட்டிக்காட்டினார். அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாங்குநேரி வெறியாட்டம்..!! கடைசி நாள் வரைக்கும் மக்களைத் திணறடிக்கும் திமுக... அண்ணாமலை கண்டனம்..!