கே. அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அவரது தலைமையில், பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி, திமுக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிகள் ஆகியவை பாஜகவின் புலப்படுத்தலை அதிகரித்தன.
தலைமை மீது அண்ணாமலைக்கு அதிருப்தி எனக் கூறப்படும் நிலையில், தனக்கு எந்தவிதமான அதிருப்தியும் கிடையாது எனவும் பணிச்சுமை தான் காரணம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல் முருகன், வானதி சீனிவாசன், எச் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அண்ணாமலை, அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அச்சச்சோ!! அண்ணாமலைக்கு என்னாச்சு... வீட்டிற்குள் முடங்க இதுதான் காரணமா?
எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக கூட்டம் கூடுகிறது என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்ன ஆச்சு அண்ணாமலைக்கு? இதுக்கு கூட வரலையாம்... BJP தலைகள் குழப்பம்..!