கோவையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இயற்கை விவசாய மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி கோயம்புத்தூர்க்கு வருகை தர இருப்பதாக தெரிவித்தார். சில நபர்கள் மதத்தை பயன்படுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். டெல்லியில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் மிகவும் அபாயகரமானது என்றும் கூறினார். மேலும், கோவில் பிரசாதங்களில் ரசாயனத்தை கழக தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரித்தார். தீவிரவாதத்தை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆபத்து அதிகம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேறிய மாநிலம் என்பதால் எளிதாக தீவிரவாதிகளின் இலக்காக இருக்கும் என்றும் தமிழக அரசும் காவல்துறையும் கூடுதலாக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 6:45 மணி அளவில் டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஊர்ந்து சென்றபோது மருத்துவர் உமர் என்பவர் இயக்கிச்சென்ற கார் வெடித்தது. இதில் உமர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் 13 பேர் இந்த விபத்தில் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: #Breaking காவலர் குடியிருப்பில் படுகொலை... திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய அண்ணாமலை!
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குடியரசு தினத்தன்று மாபெரும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கைது செய்யப்பட்ட மருத்துவர் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனை எடுத்து பாதுகாப்பு நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு ஆபத்து அதிகம் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டைம் தான் வேஸ்ட்... அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட்...!