தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, பாஜ மாநில முன்னாள் தலைவ்ர் அண்ணாமலை (K. Annamalai) மீண்டும் அரசை குறிவைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி மீதான கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அவரது அறிக்கை, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு அருகே நடைபெற்ற ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வெளிவந்த தகவல், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க..! சௌமியா அன்புமணி ஆதரித்து அண்ணாமலை பரப்புரை..!!
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, இது ஒரு தனிப்பட்ட குற்றச்சம்பவம் மட்டுமல்ல; மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டதற்கான சுட்டுக்காட்டாக பார்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு காவல்துறையோ சட்டத்தையோ பற்றிய அச்சம் குறைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன் விளைவாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை நீடித்தால், சமூகத்தில் பாதுகாப்பு உணர்வு மேலும் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையை சரிசெய்யவும், மாநிலத்தை மீண்டும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரவும் காலம் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை எவ்வாறு முன்னேறும் என்பது குறித்து பொதுமக்கள் கவனமாகக் காத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின்! என்ன சொன்னாலும் திமுக தோற்க போறது உறுதி - அண்ணாமலை!