அன்வர் ராஜா, தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்வர் ராஜா, இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. அவர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுக மீதான அதிருப்தியில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது ஏன் என அன்வர் ராஜா விளக்கம் அளித்தார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் ஸ்டாலின் என்று கூறினார்.ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்து தான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பதாகவும் கூறினார். முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை என்றும் மூன்று முறை கூட்டணி குறித்து பேட்டி அளித்த அமித் ஷா, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக உடனான கூட்டணி தொடர்பாக தனது ஆதங்கத்தை பலமுறை தெரிவித்தும் அதிமுக கண்டுகொள்ளவில்லை என்ற குற்றம் சாட்டிய அவர், பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றும் அடுத்த சாய்ஸ் திமுக தான்., அதனால் இணைந்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவில் இணைந்த EX. எம்பி அன்வர் ராஜா.. முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்..!
ஒரு தலைவரை நம்பி தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் மு.க ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் கூறினார். அதிமுகவில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை என்றும் இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் மு க ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை என்றும் இந்த முறை 15 சதவீதம் கூடுதல் வாக்குகள் பெற்று திமுக வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட முதலமைச்சருக்கு நன்றி என அன்பர் ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!