தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நாளை மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நாளை சட்ட பேரவை கூடுகிறது.

நாளை காலை சட்டப்பேரவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். தொடர்ந்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. வால்பாறை தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை அலுவலர்கள் ஒத்தி வைக்கப்படும் என கூறப்பட்டது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் காசா போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... பரபரப்பான களத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை...!
எத்தனை நாட்களுக்கு சட்ட சபையை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் குழு நடந்தது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில், நாளை தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் நடந்த ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அக்.14ல் கூடுகிறது சட்டப்பேரவை... சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!