எம். அப்பாவு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியை சேர்ந்தவர். அவர் 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் சுயேட்சை வேட்பாளராகவும், 2006ஆம் ஆண்டு திமுக வேட்பாளராகவும் வெற்றி பெற்றவர். 2016 தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், 2021 தேர்தலில் 5,925 வாக்குகள் பெரும்பான்மையுடன் திரும்பி வென்றார். இந்த வெற்றியின் பிறகே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை சபாநாயகர் பொறுப்புக்கு முன்னிறுத்தினார்.
இது தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலினின் உத்தியின் ஒரு பகுதி என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. சபாநாயகர் பதவி, சட்டமன்றத்தின் அமைதியை காத்து, விவாதங்களை வழிநடத்தும் முக்கிய பொறுப்பு. தமிழக சட்டப்பேரவை தலைவராக அப்பாவு நியமனம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

அப்பாவு மகனுக்கு திமுகவின் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. நெல்லை வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளராக சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் வடக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் நியமனம் செய்வதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம். வள்ளியூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கிரகாம் பெல் திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால், அவருக் குப் பதிலாக அலெக்ஸ் அப்பாவு வள்ளியூர் வடக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வண்ண மீன்கள் என்றாலே கொளத்தூர் தான்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!